2015 தேர்தல் மதிப்பெண் அறிக்கை

கடந்த பத்து வருடங்களாக கன்சர்வேட்டிவ் கட்சியினர் இந்த நாட்டை ஆண்டு வந்துள்ளனர். இது மாற்றத்துக்கான நேரம். ஸ்டீபன் ஹார்ப்பரின் ஆட்சியின் கீழ் கனடாவின் அரசியலில் ஒவ்வொரு அசைவும் கட்சி மயப்படுத்தப்பட்டதாகவும் அவர்களால் முதலிடப்பட்டுள்ள எண்ணெய் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றின் நன்மையையே முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பாராளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிக்கும் எந்த ஒரு எதிர்ப்பையும் மீறித் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளில் இந்தக் கட்சி ஈடுபட்டு வருகின்றது. நிதி வெட்டுக்களை மேற்கொள்ளுதல், நல்லுறவை அழித்தல், சட்டத்தை தகாத வழியில் உபயோகித்தல் போன்றவை அவற்றில் சிலவாகும்.
2015 ஆம் ஆண்டில் உங்களுக்கு முக்கியமான விடயங்களில் கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்து வாக்களியுங்கள். அதற்கு இந்த கட்சி மதிப்பெண் அறிக்கை உங்களுக்கு உதவியாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் தொழிலாளர் சபை இதை வெளியிட்டுள்ளது.

இங்கே கிளிக் செய்து அதை தரவிறக்கம் செய்து கொள்ளவும் .  Election Rpt Crd Tamil Final Final

Posted in Uncategorized | Comments Off on 2015 தேர்தல் மதிப்பெண் அறிக்கை

தமிழ் தொழிலாளர்கள் வலைப்பின்னல்

logo twnlabourcouncillogo

தமிழ் தொழிலாளர்கள் வலைப்பின்னல்

Tamil Workers Network

தமிழ் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கான வலைப்பின்னல் ஒன்றை தொழிலாளர் சபை உருவாக்குகின்றது. இந்த வலைப்பின்னலானது:

  • தமிழர்கள் தொழிற்சங்கங்களில் தலைமைத்துவம் உள்ளடங்கலான ஏனைய பங்களிப்புக்களை அதிகரிப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துதல்
  • வாழ்வாதாரத்துக்கான ஊதியம் மற்றும் குழந்தைப்பராமரிப்புக் கட்டணம் உள்ளடங்கிய எமது சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமானவற்றை அடையாளப்படுத்தி அவற்றில் தொழிலாளர் சபையின் பங்கை ஆராய்தல்
  • தொழிற்சங்கங்களின் தேவையையும் முக்கியத்துவத்தையும் பங்களிப்பையும் சமூகத்தில் பகிர்ந்து கொள்ளுதல்
  • தொழிற்சங்க சட்டம் மற்றும் தொழில்வாய்ப்பு தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு மக்களை ஒன்றிணைத்தல்
  • தொழிற்சங்கங்களில் இணையவிரும்பும் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத தொழிலாளர்களை நோக்கிய அணுகுமுறைகளை மேற்கொள்ளுதல்
  • சமூக மற்றும் பொருளாதார நீதியை நோக்கிய கூட்டணிகளை உருவாக்குதல்

The Toronto & York Region Labour Council is creating a network of Tamil-Canadian union members. This network will:

– Bring people together to discuss key issues within the community that labour should be addressing, including living wage and affordable childcare.

– Help mobilize to improve labour law and Employment Standards.

– Outreach to unrepresented workers who want to unionize.

– Create alliances around goals of social and economic justice.

– Give people confidence to be active in their union, including taking leadership.

– Share the importance and contribution of Unions with the community.

Posted in Uncategorized | Comments Off on தமிழ் தொழிலாளர்கள் வலைப்பின்னல்